Thursday, December 26, 2024

பூனையின் அழகில் மயங்கிய குரங்கு .. !

“உன்னை கண்டதும் கூட்டை மறந்த தேனி போல் தடுமாறுகிறேன் நான் ” என்ற கவிதை வரிகளின் விளக்கம் இதுதானோ…? என்பது போல ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

குரங்குகள் மிகவும் புத்திசாலியானவை அத்துடன் குறும்புத்தனமான விலங்கு. குரங்குகளின் செயல்பாடுகள் மற்றும் பழக்கவழக்கங்கள் பல நிலைகளில் மனிதர்களுடன் ஒத்துப் போகின்றன.குறிப்பாக மனிதர்களைப் போல `மிமிக்ரி’ செய்யும் திறமை குரங்குகளுக்கு உண்டு.

மனிதர்களிடமும் மற்ற விலங்குகளிடமும் அன்பாக பழகும் குணம்படைத்தவை குரங்குகள். இதனை உணர்த்தும் வீடியோ ஒன்று தற்போது பலரின் கவனத்தை பெற்றுள்ளது.

இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோவில் , பெண் ஒருவர் தனது செல்லப்பிராணியான பூனையை ஓர் குரங்கிடம் அருகில் அமர்ந்து காட்டுகிறார். வெள்ளை நிறத்தில் அழகாக இருக்கும் அந்த பூனையை கணடதும் அருகில் வந்து அமர்ந்துகொண்டது கூட்டத்தில் ஓர் குரங்கு.

ஏதோ ஒரு ஈர்ப்பை உணர்ந்தது போல பூனையின் பாதங்களை தன் கையால் தொடும் அந்த குரங்கு ஒரு கட்டத்தில் பூனையின் முகத்தில் முத்தமிடுகிறது. தன் மீது அன்பை வெளிப்படுத்தும் குரங்கின் செயலுக்கு பூனை சீண்டாமல் அமைதியாக தன் எஜமானர் மடியில் அமர்ந்துள்ளது.

https://www.instagram.com/naturre/?utm_source=ig_embed&ig_rid=1883d487-48ca-4fdf-a3b1-7ea97f374fbe

குழந்தையை போல அழகாகவே தன் அன்பை வெளிப்படும் அந்த குரங்கு , குரங்கிடம் மயங்கும் அந்த பூனை , பார்ப்பவர்களை ரசிக்க வைக்கும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Latest news