Wednesday, April 2, 2025

2029-லும் மோடியே பிரதமராக தொடர்வார் : தேவேந்திர பட்நாவிஸ்

பாஜகவில் 75 வயது நிறைவடைந்துவிட்டால் எந்த ஒரு பதவியிலும் நீடிக்க முடியாது என்பது நடைமுறை. அந்தவகையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்த ஆண்டு 75 வயது நிறைவடைகிறது.

இது குறித்து உத்தவ் தாக்கரே சிவசேனா மூத்த தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ராவத், பிரதமர் நரேந்திர மோடி நேற்று மராட்டிய மாநிலம் நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்துக்கு சென்றார். ஆர்.எஸ்.எஸ். இயக்க தலைவர்களிடம் தெரிவிக்கவே அவர் அங்கு சென்றதாக கூறினார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக 2029-லும் மோடியே பிரதமராக தொடர்வார் என மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் தெரிவித்துள்ளார்.

Latest news