Saturday, December 6, 2025

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக மோடி என்னிடம் உறுதி – டிரம்ப் பேச்சு

ரஷ்ய எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி தன்னிடம் உறுதி அளித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசியது பரபரப்பை கிளப்பியுள்ளது.

இது குறித்து பேசிய அதிபர் டிரம்ப், “பிரதமர் மோடி எனது நண்பர். எங்களுக்குள் சிறந்த உறவு இருக்கிறது. இந்தியா ரஷியாவின் எண்ணெய் வாங்குவதில் எனக்கு மகிழ்ச்சியில்லை. மேலும், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்க மாட்டோம் என்று என்னிடம் இன்று உறுதியளித்தார்.

சீனாவையும் இதனைச் செய்ய வைக்க வேண்டும். மேலும், இந்தியாவின் நடவடிக்கை மூலம் ரஷ்யாவுக்கு உலகளாவிய அழுத்தத்தை அதிகரிக்கும் முயற்சியில் பெரிய படியாக அமைந்திருக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News