பாகிஸ்தான் மற்றும் நேபாளத்தில் ஏற்பட்ட மிதமான நிலநடுக்கத்தால் பொதுமக்கள் பீதியடைந்தனர்
நேபாளத்தில் இன்று அதிகாலையில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இதேபோல் பாகிஸ்தானில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 4.5 ஆக பதிவானது. இருநாடுகளிலும் ஏற்பட்ட நிலநடுக்கம் குறித்த சேத விபரங்கள் இன்னும் வெளியாகாத நிலையில், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.