இந்தியாவின் மொபைல் போன் தயாரிப்புத் துறை விண்ணை முட்டும் வளர்ச்சியை எட்டியுள்ளது. 2025 ஜனவரியில் மட்டும் ரூ. 1.5 லட்சம் கோடிக்கு மொபைல் போன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
ஐசிஇஏ வின் கூற்றுப்படி, மொபைல் போன் உற்பத்தி கடந்த நிதியாண்டில் ரூ. 2,20,000 கோடியிலிருந்து இந்த நிதியாண்டில் ரூ. 4,22,000 கோடியாக இரட்டிப்பாகியுள்ளது. மேலும், 2024-25 நிதியாண்டில் உற்பத்தி ரூ. 5,10,000 கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசாங்கத்தின் வலுவான ஆதரவு மற்றும் தொழில்துறையின் திறமையால் கணிசமான வளர்ச்சியை அடைந்துள்ளோம். இன்னும் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. மாறிவரும் புவிசார் அரசியல் சூழலில், நமக்கான வாய்ப்பு குறுகியது. நாம் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என ஐசிஇஏ தலைவர் பங்கஜ் மொஹிந்த்ரூ தெரிவித்துள்ளார்.