Monday, December 22, 2025

செல்போனில் பேசிய மு.க.ஸ்டாலின்; கண் கலங்கிய திமுக செயலாளர்

2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு உடன்பிறப்பே வா என்ற தலைப்பில் திமுக நிர்வாகிகளை நேரில் சந்தித்து வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தொகுதி நிலவரம் குறித்து கேட்டறிந்தும் பல்வேறு ஆலோசனை மற்றும் அறிவுரைகளை நிர்வாகிகளுக்கு வழங்கியும் வருகிறார்.

அதன்படி முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்த ஆலங்குளம் ஒன்றியச் செயலாளர் செல்வகுமார், தனது தந்தை 1967 முதல் திமுகவில் இருப்பதாகவும், தங்களுடன் புகைப்படம் எடுக்க அழைத்து வரலாமா எனக் கோரினார்.

உடனடியாக தந்தையை போனில் அழைக்குமாறு கூறிய முதலமைச்சர் செல்வக்குமாரின் தந்தையிடம் பேசி சென்னை வருமாறு கூறினார். இதைக் கண்டு ஒன்றியச் செயலாளர் கண் கலங்கி நின்றார். இதனை முதலைச்சர் அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Related News

Latest News