Thursday, December 25, 2025

தென்காசி அருகே காணாமல் போன மாணவன், கிணற்றில் சடலமாக மீட்பு

தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரை பகுதியில் உள்ள புளியம்பட்டி தெருவை சேர்ந்த செல்வம் என்பவரின் மகன் பொன்ராம். இவர் அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன் தினம் பள்ளிக்கு வீட்டில் இருந்து சென்ற சிறுவன் இரவு வீடு திரும்பாத நிலையில் சிறுவனின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்த நிலையில் கருப்பசாமி என்பவருக்கு சொந்தமான கிணற்றில் சிறுவன் பொன்ராம் உயிரிழந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் சுரண்டை தீயணைப்பு மீட்புதுறை உதவியோடு சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related News

Latest News