Friday, May 16, 2025

இந்தியா மீது சீனர்கள் வீசிய ஏவுகணை? தந்திரமாக இந்தியாவுக்கு குழி பறித்த அதிர்ச்சி! வெட்டவெளியான சீக்ரெட் Plan?

இந்தியா பாகிஸ்தான் போரில் சீனா குளிர் காய்ந்து ஆதாயம் தேடியதாக தற்போது தகவல்கள் வெளிவந்து பரபரப்பை கிளப்பிவிட்டுள்ளன. நடந்த போரில் நினைத்ததை விட சீனாவின் தலையீடு அதிகமாக இருந்திருக்கலாம் என்று இந்திய ராணுவம் சந்தேகிப்பதாக தகவல்கள் வந்தபடி இருக்கின்றன.

பாகிஸ்தான் ராணுவத்தின் கைவசம் சீனாவின் J ரக போர் விமானங்கள் மற்றும் PL-15 வகை ஏவுகணைகள் என்று பல இருக்கின்றன. பாகிஸ்தானின் 80 சதவிகித போர் ஆயுதங்கள் சீனாவிடம் இருந்து வாங்கப்பட்டவை என்பது இந்திய ராணுவத்திற்கு தெரிந்ததுதான் என்றாலும் தற்போது இதில் அதிர்ச்சி தரும் தகவல் என்னவென்றால், இந்தியா பாகிஸ்தான் போரில் Chinese PL-15 வகை ஏவுகணைகளை சீனர்களே இயக்கியதாக கூறப்படுவது தான். அதாவது சீனாவில் இருந்து டெக்னீஷியன்களை வரவழைத்து தாக்குதல் பணிகளை செய்துள்ளனர். அதாவது இந்தியாவிற்கு எதிராக ஏவப்பட்ட ஏவுகணைகளை பாகிஸ்தானில் இருந்து இயக்கியது சீனர்களாக இருக்கலாம் என்ற தகவல் கசிந்துள்ளது.

இந்தியா மீது தாக்குதல் நடத்த சீனாவின் satellite image-கள் பயன்படுத்தப்பட்டு இருக்கக் கூடும் என்றும் இந்திய ராணுவம் சந்தேகிப்பதோடு சீனா சார்பாக பாகிஸ்தானுக்கு பல்வேறு உளவு தகவல்கள் அனுப்பப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகமும் தற்போது வலுத்துள்ளது. இன்னும் சொல்லப்போனால் சீனா ஆயுதங்களை அனுப்பி, அதை இயக்க satellite image-களையும் அனுப்பி அவற்றை சரியாக பயன்படுத்த உளவு தகவல்களை கொடுத்து கூடுதலாக இவற்றை எல்லாம் இயக்க ஆட்களையும் அனுப்பியதாக வலுவான சந்தேகம் எழுந்துள்ளது.

சீனா இதற்கும் ஒரு படி மேல் சென்று, இந்தியா பாகிஸ்தான் போரை வைத்து சில ஆயுதங்களை சோதனை செய்ததாக கூறப்படுவது அதிர்ச்சியான தகவலாகவே இருக்கிறது.

Latest news