மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் குறித்து தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
அதில்,”மத்திய அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய மேம்பாட்டு சேவை மையம் ,மார்ச் மாதம் வருகிற 12ஆம் தேதி [அதாவது நாளை] சனிக்கிழமை அன்று காலை 9:30 முதல் மாலை 3 மணி வரை இந்நிகழ்வு நடைபெறும் எனவும்,
பல்வேறு முன்னணி நிறுவனங்கள் உட்பட 15க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இந்த முகாமின் மூலம் வேலை வாய்ப்பினை வழங்க உள்ளது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கல்வித்தகுதிகளை பொறுத்தவரை 10ஆம் வகுப்பு ,12ஆம் வகுப்பு ,டிப்ளமோ படித்திருக்க வேண்டும் எனவும் அவர்கள் 18 முதல் 35வயது வரை இருக்கவேண்டும் எனவும்
இந்த முகாம் கை ,கால் குறைபாடு மற்றும் செவித்திறன் குறைபாடு உடையோருக்காக இச்சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விருப்பமுள்ளவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை,சுய விவரம்,ஆதார் அட்டை ஆகியவற்றின் நகலுடன் வந்து முகாமில் பங்கேற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.