சென்னை விருகம்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட எம்.ஜி.ஆர் நகர் மார்க்கெட்டில் பாஜக சார்பில் அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தலை தமிழிசை சௌந்தரராஜன் திறந்து வைத்து இளநீர், மோர், வெள்ளரிக்காய் உள்ளிட்டவற்றை பொதுமக்களுக்கு வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜக மக்களுக்காக தொண்டாற்றும் கட்சி என்றும், ஆனால் தற்பொழுது ஆளும் கட்சி மக்களை பற்றி சிரிதும் யோசிக்காமல் உள்ளதாகவும் குற்றம்சாட்டினார். தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பான சூழல் இல்லை என்றும் குற்றம்சாட்டினார்.
துணை முதலமைச்சர் உதயநிதிக்கு துதிபாடும் குயில்களாக அமைச்சர்கள் இருக்கிறார்கள். தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக அறிவிக்கப்படாத நிலையில் ஏன் இதுகுறித்து தினம் தினம் பேசுகிறார்கள்? என்றும், 2026 தேர்தல் திமுகவுக்கு பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும் கூறினார்.