Wednesday, December 24, 2025

“நீங்க அடிச்ச கமிஷன் எவ்வளவு?” – அண்ணாமலைக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி

தமிழ்நாட்டை 5 லட்சம் கோடி கடனாளி மாநிலமாக மாற்றிவைத்திருக்கிறார்கள்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிய பழைய காணொளி ஒன்றை தனது எக்ஸ் வலைதளத்தில் பகிர்ந்துள்ள தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, “இன்று மொத்தக் கடன் 9.5 லட்சம் கோடி ரூபாய். நீங்கள் அடித்த கமிஷன் எவ்வளவு” என பதிவிட்டார்.

இதற்கு பதில் அளித்துள்ள அமைச்சர் தங்கம் தென்னரசு, “2014ஆம் ஆண்டு 55.87 லட்சம் கோடியாக இருந்த இந்தியாவின் கடன் சுமை தற்போது 2025ஆம் ஆண்டு 181.74 லட்சம் கோடியாக மாறியிருக்கிறதே, அப்படியென்றால் நீங்கள் எல்லாம் கூடி அடித்த கமிஷன் எவ்வளவு என்று திருப்பிக் கேட்கலாமா?

தமிழ்நாட்டின் மீது உண்மையில் உங்களுக்கு அக்கறை இருந்தால் நிதியைப் பெற்றுத் தாருங்கள். கடந்த மூன்றாண்டுகளில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தலைமையில் தமிழ்நாடு அடைந்திருக்கும் வளர்ச்சியை ஒன்றிய அரசின் பொருளாதார அறிக்கை 2025 பாராட்டியிருக்கும் நிலையில், சமூக வலைத்தளங்களில் அவதூறை மட்டுமே பரப்புவது உங்களது அரசியல் முதிர்ச்சிக்கான போதாமையையே காட்டுகிறதே தவிர வேறல்ல” எனத் தெரிவித்துள்ளார்.

Related News

Latest News