“உங்களுடன் ஸ்டாலின்” முகாம் சட்டமன்ற தொகுதி வாரியாக நடைபெற்று வருகிறது. நெற்குன்றம் பகுதியில் இன்று நடைபெறும் முகாம் பணிகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் மா.சுப்பிரமணியன் பேசியதாவது : அ.தி.மு.க. ஆட்சியில் அம்மா உப்பு, அம்மா குடிநீர் என செயல்படுத்தி இருந்தனர். ஆனால் இன்று உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் பெயரை எடப்பாடி பழனிசாமி விமர்சிப்பது தவறு. எதிர்க்கட்சி தலைவர் முதலமைச்சரை ஒருமையில் விமர்சிப்பது சரியான நாகரீகம் அல்ல.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல் நலன் நன்றாக இருக்கிறது. மு.க.முத்து இறப்பின் நேரத்தில் முதல்வர் கூடுதலாக நேரத்தை செலவிட்டு இருந்தார். அதனால் சோர்வு ஏற்பட்டது. பயப்படும் அளவுக்கு ஒன்னும் சிக்கல் இல்லை. இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.