முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் டெல்லி பயணத்தை விமர்சித்து தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டிருப்பது குறித்து அமைச்சர் சேகர்பாபுவிடம் கேள்வி கேட்கப்பட்டது.
இது குறித்து பதிலளித்த அவர் : நேற்று முளைத்த காளான்களுக்கு எல்லாம் பதில் சொல்ல தயாராக இல்லை. களத்திற்கு வரட்டும் அவர்கள் எந்த வகையில் அடிக்கிறார்களோ அதை விட 100 மடங்கு அடிப்பதற்கு திமுக தயாராக உள்ளது.
ஏதோ ஒரு நாள் அறிக்கையில் ஏதோ ஒருநாள் ரோடு ஷோ செய்து விட்டு செல்கின்ற முதலமைச்சர் இல்லை எங்கள் முதலமைச்சர். அனுதினமும் மக்களோடு மக்களாக பயணிக்கக்கூடியவர் என அவர் கூறியுள்ளார்.