Saturday, February 22, 2025

தைரியம் இருந்தால் அறிவாலயத்தின் ஒரு செங்கலையாவது அண்ணாமலை தொட்டுப் பார்க்கட்டும் – அமைச்சர் சேகர் பாபு சவால்

தெம்பு திராணி, தைரியம் இருந்தால், அண்ணாசாலையில் அமைந்துள்ள அறிவாலயத்தின் ஒருவர் செங்கலையாவது அண்ணாமலை தொட்டுப் பார்க்கட்டும் என்று அமைச்சர் சேகர்பாபு சவால் விடுத்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு திமுக சார்பில் ஒரு வருடத்திற்கு தினம்தோறும் காலையில் “அன்னம் தரும் அமுதக்கரங்கள்” என்ற பெயரில் காலை உணவு தரும் திட்டத்தை நேற்று துர்கா ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இரண்டாவது நாளான இன்றைக்கு கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட ஜி.கே.எம் காலனிப் பகுதியில் பொதுமக்களுக்கு அமைச்சர் சேகர்பாபு காலை உணவு வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தெம்பு திராணி, தைரியம் இருந்தால் அண்ணாசாலையில் அமைந்திருக்கிற அண்ணா அறிவாலயத்தின் ஒரு செங்கலையாவது அவர் தொட்டுப் பார்க்கட்டும் என்று சவால் விடுத்தார். மேலும், கீழ்பாக்கத்தில் இருக்க வேண்டியவர்கள் எல்லாம் பிதற்றி வருவதாக குற்றம்சாட்டினார்.

Latest news