பதற்றம் வேண்டாம் – கொரோனா பரவல் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

இந்தியாவில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் தற்போது அதிகரித்து வருகிறது. தமிழகம் மற்றும் கேரளாவில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது :

கொரோனா உருமாற்றம் பெற்று வருகிறது. இந்தியா முழுவதும் 1800-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. வீரியம் இல்லாத ஒமைக்ரான் வகையிலான தொற்று தற்போது பரவி வருகிறது. ஆனாலும் பெரிய பாதிப்பு ஏற்படுத்துவது இல்லை. எனவே யாரும் பதற்றம் அடைய தேவை இல்லை.

கொரோனா சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன. வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். கை கழுவுதல், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடிப்பது அவசியம் என அவர் கூறியுள்ளார்.

Related News

Latest News