“கூரையேறி கோழி பிடிக்க முடியாதவர், வானத்தில் ஏறி வைகுண்டத்தை காட்டுவேன்” என்பதுபோல் உள்ளது விஜயின் பேச்சு என அமைச்சர் கோவி.செழியன் விமர்சித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் நடுவூரில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழக மக்களையே வென்றெடுக்க முடியாத விஜய், புதுச்சேரி மக்களை வென்றெடுப்பேன் என்பது, கூரையேறி கோழி பிடிக்க முடியாதவர், வானத்தில் ஏறி வைகுண்டத்தை காட்டுவேன் என்பதுபோல் உள்ளது என்று தெரிவித்தார். ஆசைக்கு அளவில்லை என்பதற்கு அடையாளம் நடிகர் விஜய் என்றும் கூறினார்.
