‘மிட்நைட் ரன்னர்’ பிரதீப் மெஹ்ராவிக்கு 2.5 லட்சம் வழங்கிய Shoppers Stop !

410
Advertisement

‘தி மிட்நைட் ரன்னர்’ என சில தினங்களுக்கு முன்  சமூக ஊடகங்களில் ஒரு இளைஞர் பற்றி செய்திகள் வைரலாகியது.

திரைப்படத் தயாரிப்பாளர் வினோத் கப்ரி தன் சமூக வலைத்தபக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்தார்.அதில்  வினோத் கப்ரி , இரவில் நொய்டா சாலையில் தன் காரில் சென்றுகொண்டு இருந்த பொது ஒரு இளைஞர்  ஓடிக்கொண்டு இருந்தார். அவருக்கு உதவ நினைத்த கப்ரி , அவரை அணுகியுள்ளார் ஆனால் அந்த இளைஞர் உதவியை மறுத்துவிட்டார்.

https://twitter.com/vinodkapri/status/1509180184729387008/photo/1

ஏன் அவர் அப்படி செய்தார் என தெரிந்துகொள்ள நினைத்த கப்ரி அவரிடம் காரணம் கேட்க, அந்த இளைஞர் தான் இராணுவத்தில் சேர விரும்புவதாகம் ,தான் வேலை செய்வதால் பயற்சிக்கென தனியாக நேரம் ஒதுக்கமுடியவில்லை , தன் சகோதரன் உடன் தங்கி உள்ளதாகவும் , தனது தாய் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் உள்ளதாகவும் தெரிவித்தார்.

எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் தினம் தினம் 10 கிமீ ஓடியே வீட்டை சென்றடையும் இவரின் இராணுவத்தில் சேரவேண்டும் என்ற முயற்சி மற்றும் இவரின் கனவு இணையத்தில் அனைவரின் கவனத்தை ஈர்த்தது.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியதை அடுத்து , பிரதீப் மெஹ்ராவிக்கு பல தரப்பிடமிருந்தும் வாழ்த்துக்கள் குவிந்தன மற்றும் அவரை தேடி வருகிறது உதவிகள். இந்நிலையில் ஷாப்பர்ஸ் ஸ்டாப்  என்ற  பல்பொருள் அங்காடி பிரதீப்பின் கஷ்டங்களை அறிந்து அவரது தாயின் சிகிச்சைக்காக 2.5 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளது. இந்த செய்தியை கப்ரி ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

அதில் , “நள்ளிரவு ஓட்டப்பந்தய வீரர் பிரதீப் மெஹ்ரா அனைத்து அன்பு மற்றும் ஆதரவால் நிரம்பி வழிகிறார். , ஷாப்பர்ஸ் ஸ்டாப் அவரது தாயின் சிகிச்சைக்காகவும் (அவரது கனவுகளைத் தொடர) 2.5 லட்ச ரூபாய்க்கான காசோலையை வழங்கியது. கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக,” என்று குறிப்பிட்டுள்ளார்.

யார் எதிர்பார்ப்பும் இல்லாமல் தன் கனவை மட்டும் இலக்காக நிர்ணயித்து தன்னம்பிக்கை உடன் ஓடிக்கொண்டுருக்கும் இந்த இளைஞர், பலருக்கும் எடுத்துக்காட்டாக மாறியுள்ளார்  என்பதை மறுக்க முடியாது .