கோவை மாவட்டம் அன்னூரில் நடைபெற்ற அவினாசி அத்திக்கடவு திட்டக் குழு சார்பில் முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் முன்னாள் அமைச்சரும் கோபி சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான கே.ஏ. செங்கோட்டையன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் புறக்கணிப்பதாக தகவல் வெளியானது.
இது குறித்து முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது : அத்திக்கடவு திட்டத்தை கொண்டுவர 2011இல் ஜெயலலிதா ரூ.3.72 கோடி அளித்தார். திட்டப் பணிகளை தொடங்க அடித்தளமாக இருந்த தலைவர்களின் படங்கள் பேனர்கள், அழைப்பிதழ்களில் இல்லை. அத்திக்கடவு-அவிநாசி திட்டக் குழு நடத்திய பாராட்டு விழாவை புறக்கணிக்கவில்லை. எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் வைக்கப்படாததால் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.