Monday, December 29, 2025

தண்டவாளத்தில் பழுது : மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு, பயணிகள் அவதி

சென்னை விமான நிலையத்தில் இருந்து விம்கோ நகர் நோக்கி செல்லும் தண்டவாளத்தில் இன்று காலை பழுது ஏற்பட்டது. இதன் காரணமாக விமான நிலையத்தில் இருந்து கோயம்பேடு வழியாக சென்ட்ரல் நோக்கி செல்லும் மெட்ரோ ரயில் சேவை பாதிப்படைந்தது. இதனால் காலையில் சிறிது நேரம் பயணிகள் சிரமத்திற்கு ஆளானார்கள்.

பின்னர் தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு ரெயில்கள் வழக்கம் போல இயக்கப்பட்டன. இன்று விடுமுறை தினமாக இருந்ததால் பயணிகள் கூட்டம் குறைவாகவே இருந்தது.

Related News

Latest News