Thursday, January 15, 2026

3600 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் மெட்டா நிறுவனம்

மெட்டாவில் இருந்து 3 ஆயிரத்து 600 பேர் பணிநீக்க செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மெட்டா நிறுவனம் பல்வேறு நாடுகளில் இயங்கி வரும் தனது நிறுவனத்தில் இருந்து சுமார் 3 ஆயிரத்து 600 பணியாளர்களை பணி நீக்கம் செய்யவுள்ளது. ஊழியர்களுக்கு மின்னஞ்சல் மூலம் பணி நீக்கம் செய்யப்பட்டதற்கான தகவல் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த பணி நீக்க நடவடிக்கை வருகின்ற 18ம் தேதி வரை நடைபெறும் என்று மெட்டா நிறுவனத்தின் மனிதவளத் துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

Related News

Latest News