பீகாரில் மெகா வெற்றி! ஆனால் பாஜகவுக்கு வந்த திருகுவலி! இப்படியொரு சிக்கலை எப்படி சம்மாளிக்கப்போகிறது?

பீகார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகு, பாஜக இரண்டு முக்கிய விஷயங்களில் சிக்கியுள்ளது. முதலில், அடுத்த முதல்வர் யார் என்பதும், அடுத்து அமைக்கப்பட உள்ள அரசு எந்த கட்டமைப்பில் இருக்கும் என்பதும் தற்போது கூட்டணிக்குள் விவாதமாகியுள்ளது.

இந்த முறை என்.டி.ஏ ஆதிக்கம் அதிகரித்துள்ளதால், அமைச்சரவை அமைப்பில் பெரிய மாற்றங்கள் தவிர்க்க முடியாததாக காணப்படுகிறது. முதல் முறையாக ஐந்து கூட்டணி கட்சிகளுக்கும் அமைச்சரவை பிரதிநிதித்துவம் கிடைக்க வாய்ப்புள்ளது.

2020-ஆம் ஆண்டு தேர்தலின் போது 3.5 எம்.எல்.ஏ.க்களுக்கு ஒரு அமைச்சர் என்ற கணக்கு இருந்தது. இந்த முறை என்.டி.ஏ 202 இடங்களை பெற்றுள்ளதால், 6 எம்.எல்.ஏ.க்களுக்கு ஒரு அமைச்சர் என்ற புதிய சூத்திரம் அமலாக்கப்படலாம். இந்த அடிப்படையில் ஜேடியுவுக்கு 15 அமைச்சர்கள், பாஜகவுக்கு 16, எல்ஜேபி R க்கு 3, மேலும் உபேந்திர குஷ்வாஹா மற்றும் எச்.ஏ.எம் ஆகியோருக்கு தலா ஒரு அமைச்சரை நியமிக்க வாய்ப்பு உள்ளது.

பாஜக கடந்த முறை வகித்திருந்த நிதி, சாலை கட்டுமானம், சுகாதாரம் போன்ற முக்கிய துறைகள் சில குறைக்கப்படலாம். எல்ஜேபி R க்கு முக்கிய துறைகள் வழங்கப்படலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜேடியு துறைகளிலும் சில மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

இதற்கிடையில், நிதிஷ் குமார் அமைச்சரவையில் இருந்த இரண்டு அமைச்சர்கள் தோல்வியடைந்ததால் அவர்கள் நீக்கப்படுவதே உறுதி. அதேபோல், 6 எம்.எல்.ஏ.க்கள் Formula-வால் பாஜக மேலும் சிலரை நீக்க வேண்டியிருக்கலாம்.

இந்த நிலைமையில், துணை முதல்வர் பதவி எத்தனை பேருக்கு வழங்கப்படும்?, 19 இடங்கள் பெற்ற எல்ஜேபி (ஆர்) கூட அந்த பதவியை கோருமா? என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

Related News

Latest News