தமிழக அரசு கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் 2023-ல் தொடங்கப்பட்டது. தகுதியான ஆனால் இதுவரை சேர்க்கப்படாத பெண்களுக்கு புதிய விண்ணப்பங்கள் சேர்க்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், தமிழகத்தில் ஏற்கனவே அதிமுக ஆட்சியில் பொங்கல் பரிசு தொகையாக ரூ.1000 பணமும், பொருட்களும் கொடுக்கப்பட்டது, ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பொங்கலுக்கு பணம் எதுவும் கொடுக்கவில்லை. பொருட்களை மட்டும் தான் கொடுத்துவந்தள்ளனர். அதுவும்கூட வெள்ளம் தண்ணியாக உருகுகிறது. தரமான பொட்களாக இல்லை என பல புகார்கள் அளித்தனர்.
இந்த நிலையில், அடுத்த ஆண்டு தேர்தல் நெருங்கும் வேளையில் புதிய அறிவிப்பை முதலைச்சர் ஸ்டாலின் வழங்க இருக்கிறார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது, பொங்கலுக்கு ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும் மூன்றாயிரம் ரூபாய் கொடுக்கலாம் என்று மூத்த அமைச்சர்கள் முதல்வர் ஸ்டாலினுக்கு ஆலோசனை சொல்லி இருப்பதாகக் கூறப்படுகிறது.
அதாவது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் பரிசு தொகையாக ரூ.2000 கொடுக்கலாம். அதற்குண்டான நிதி ஏற்பாடுகளை கவனத்தில் கொள்ளுங்கள் என அதிகாரிகளிடம் கூறியிருக்கிறார். அதனால் கூடிய விரைவில் பொங்கல் பரிசு தொகை ரூ. 2000 பற்றிய அறிவிப்பு வெளியாக இருக்கிறது.
மேலும், முதலமைச்சர் ஸ்டாலின் அதிகாரிகளுடன் மகளிர் உரிமை திட்டத்தை உயர்த்தி வழங்குவது பற்றியும் ஆலோசித்து இருக்கிறார். அதாவது, தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை ரூ. 1000 கொடுக்கிறோம். ஜனவரியில் இருந்து விடுபட்ட மகளிருக்கும் மகளிர் உரிமைத்தொகையை வழங்கப்போகிறோம் என்று அதிகாரிகள் கூறி இருக்கின்றனர். அப்போது முதல்வர் ஸ்டாலின் இந்த மகளிர் உதவித் தொகையை ரூ. 1500 ஜனவரியில் இருந்து வழங்கலாமா? என்று கேட்டிருக்கிறார்.
அதிகாரிகள் அதற்கு சில ஆலோசனைகளை வழங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது, ஆகையால் பொங்கல் பரிசு, மகளிர் உரிமைத் தொகை உயர்வு என அடுத்தடுத்த இரண்டு அறிவிப்புகள் எந்த நேரத்திலும் அதிரடியாக வெளியாகலாம்’’ என்றும் அரசு தரப்பு அதிகாரிகள் வட்டாரம் தெரிவிக்கிறது. வரும் நாட்களில் தான் தெரியவரும்!
