நோயாளிகளை ஊசி போட்டு கொன்ற செவிலியர் : ஜெர்மனியில் கொடூரம்

ஜெர்மனியில் ஊர்செலன் நகரில் உள்ள மருத்துவமனையில் செவிலியர் ஒருவர் நோயாளிகளை பராமரிப்பதற்கு பதிலாக அவர்களை ஊசி போட்டு கொலை செய்த குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளார். இந்த அதிர்ச்சி சம்பவம் 2023-ம் ஆண்டு டிசம்பர் முதல் 2024-ம் ஆண்டு மே வரையில் நடந்துள்ளது.

இதுவரை 10 நோயாளிகளை கொலை செய்துள்ளார். 27 பேரை கொல்ல முயற்சியும் செய்துள்ளார். இரவு நேர பணியின்போது, பணி சுமை கூடுதலாக இருக்கிறது என உணர்ந்த அவர், இந்த முடிவை எடுத்துள்ளார்.

இதுதொடர்பான வழக்கு விசாரணையில் அந்த நபருக்கு 15 ஆண்டுகளுக்கு குறையாமல் வெளியே வர முடியாதபடிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. எனினும், அவர் மேல்முறையீடு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Related News

Latest News