Saturday, May 31, 2025

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் சகோதரி காலமானார்

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் 2வது சகோதரியான சரோஜா வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். இதையடுத்து வைகோ நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

வைகோவிற்கு 3 சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரர் உள்ளனர். வைகோவின் சகோதரர் பெயர் ரவிச்சந்திரன். வைகோவின் 2வது சகோதரி சரோஜா தனது குடும்பத்தினருடன் சென்னையில் வசித்து வந்தார். சரோஜாவின் உடல் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news