ஆதார் அட்டை என்பது இந்திய குடிமக்களின் தனித்துவமான அடையாள அட்டையாகும். இது 12 இலக்க தனிப்பட்ட அடையாள எண்ணைக் கொண்டுள்ளது. ஆதார் அட்டையில் முகவரி, பாலினம், பிறந்த தேதி போன்ற விவரங்கள் அடங்கியிருக்கும். ஆதார் அட்டை முகவரி சான்று மற்றும் அடையாள சான்றாக பயன்படுகிறது.
சரி, என்னதான் சொல்லவரா இப்போ அப்படி தானா கேக்குறீங்க?
உங்கள் ஆதார் வைத்து யாராவது மோசடியில் ஈடுபடுகிறார்களா? அல்லது யாராவது உங்களது ஆதார் அட்டையை பயன்படுத்துகிறீர்களா??
என்பதை எவ்வாறு சரிபார்ப்பது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்…
அதாவது UIDAI அதன் பயனர்களுக்கு ஆதார் அட்டை பயன்பாட்டு வரலாற்றை அதாவது History சரிபார்க்கும் வசதியை வழங்குகிறது.
முதலில் UIDAI இன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்..பின்னர் MY Aadhaar என்பதை கிளிக் செய்தல் update your aadhar என்பதை கிளிக் செய்தல் ஒரு புதிய விண்டோ திறக்கும்.. அதில் உங்கள் ஆதார் எண்ணையும் பாதுகாப்பு குறியீட்டையும் உள்ளிட வேண்டும். பின்னர் “OTP அனுப்பு” என்பதைக் கிளிக் செய்யவும். உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP வரும். அதை உள்ளிட்டு அதைச் சரிபார்க்கவும்..
அதன் பின்னர் OTP-ஐ உள்ளிட்டதும், உங்கள் ஆதாரில் அனைத்து வரலாற்று புதுப்பிப்புகளையும் ஒரே இடத்தில் பார்க்கலாம். இது புதுப்பிப்பு தேதி மற்றும் நீங்கள் என்ன வகையான புதுப்பிப்புகளைச் செய்தீர்கள் போன்ற விவரங்களை வழங்குகிறது.
இந்தச் செயல்முறையின் மூலம், ஆதார் அட்டை பயன்பாட்டின் 6 மாத வரலாற்றைச் சரிபார்த்து கொள்ளலாம்…
சரி, பார்த்துவிட்டீர்கள்.. உங்கள் ஆதார் அட்டை தவறாகப் பயன்படுத்தப்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்று தெரியுமா?
அதாவது தவறாக பயன்படுத்தப்பட்டிருந்தால் “1947” என்ற இலவச எண்ணை அழைத்து புகார் அளிக்கலாம்.
சரி, உங்களுக்கும் இந்த சந்தேகம் இருக்க.. அப்போ ஏன் இன்னும் wait பண்ணறீங்க.. உடனே check பண்ணுங்க!!