இந்திய பெருங்கடலில் இருக்கும் மொரிஷியஸ் தீவில் உள்ள லேமோர்ன் பகுதியில், கடல்நீருக்கு அடியில் ஓடும் நீர்வீழ்ச்சியின் காட்சிகள் வருடக்கணக்கில் இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.
ஆனால், அந்த நீர்வீழ்ச்சியே இயற்கை செய்த அறிவியல் மாயம் என்பது தான் இன்னும் வியப்பை ஏற்படுத்துகிறது. கடற்பரப்பில் உள்ள வண்டல் மண், மிகவும் தெளிந்த நீரை கொண்ட கடலில் பிரதிபலிக்கும் போது நீர் ஓடுவது போல மனித கண்களுக்கு காட்சி அளிக்கிறது.
உலக முழுவதும் இருந்து பல சுற்றுலாப்பயணிகளை கவர்ந்திழுக்கும் லேமோர்ன், யுனெஸ்கோவால் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த இடமாக அங்கீகரிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.