அமெரிக்காவில் அரிசோனா மாகாணம் அருகே, ஹபூப் எனப்படும் மிகப்பெரிய புழுதி புயல் ஏற்பட்டது. இந்த புழுதி புயல் சுமார் 50 அடி உயரம் வரை உயர்ந்து, 40 கிலோமீட்டர் வேகத்தில் நகரம் முழுவதிலும் பரவியது. அதனால் பேனிக்ஸ் நகரம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் தடைபட்டது.
புழுதி புயல் காரணமாக வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். மேலும் விமான சேவைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டது. புழுதி புயல் காரணமாக மக்களுக்கு சுகாதார பிரச்சனைகள் ஏற்படக்கூடும் என்பதால் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என வானிலை வல்லுநர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.