Tuesday, July 1, 2025

கனடாவின் பிரதமராக பதவியேற்றார் மார்க் கார்னி

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ(வயது 53), தனது பதவியை ராஜினாமா செய்வதாக கடந்த ஜனவரி மாதம் அறிவித்தார். இதையடுத்து அடுத்த தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற்றது. இதில் 59 வயதான மார்க் கார்னி 1,31,674 வாக்குகள் பெற்று 85.9 சதவீத வாக்குகளுடன் வெற்றி பெற்றார்.

இதையடுத்து லிபரல் கட்சியின் புதிய தலைவராகவும், கனடாவின் 24-வது பிரதமராகவும் மார்க் கார்னி தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் கனடாவின் 24வது பிரதமராக மார்க் கார்னி பதவியேற்றார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news