Sunday, July 6, 2025

அரசு ஊழியர்களுக்கு இந்த மாத இறுதியில் சம்பளம் வராது

தமிழக அரசு ஒவ்வொரு மாதமும் அரசு ஊழியர்களுக்கான சம்பளத்தை கடைசி நாளில் வழங்குவது வழக்கமாக உள்ளது. மாத இறுதியில் 30 அல்லது 31-ம் தேதியில் ஊழியர்களின் வங்கி கணக்கில் சம்பளப் பணம் செலுத்தப்படும். கடைசி நாள் விடுமுறை நாளாக இருந்தால், அதற்கு முந்தைய நாளில் சம்பளம் செலுத்தப்படும்.

நடப்பு மார்ச் மாத சம்பளம், வருடாந்திர கணக்கு முடிவுக்கான காரணமாக, இந்த மாத இறுதியில் செலுத்தப்படாது என்றும், இரண்டு நாள் தாமதமாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த ஆண்டு ஏப்ரல் 1 அன்று வருடாந்திர கணக்கு முடிவு காரணமாக வங்கிகளுக்கு விடுமுறை என்பதால், பணியாளர் மற்றும் ஓய்வூதியர்களின் வங்கிக் கணக்கில் 02.04.2025 அன்று வரவு வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news