Wednesday, February 25, 2026

மார்ச் மாதத்தில் வங்கி விடுமுறை இத்தனை நாட்களா..? லிஸ்ட் இதோ

மார்ச் மாதத்தில் ஹோலி, ரம்ஜான் உள்ளிட்ட பல பண்டிகைகள் வருவதால் பல்வேறு நாட்களில் வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்படும். ஆகையால், வங்கி தொடர்பான பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டு மேற்கொள்வது அவசியமாகும். மார்ச் 2026ஆம் ஆண்டுக்கான வங்கி விடுமுறை நாட்களை அறிந்து செயல்படுவது சிறந்தது.

ஹோலி பண்டிகையை முன்னிட்டு மார்ச் மாதத்தின் முதல் வாரத்தில் நாட்டின் பல பகுதிகளில் வங்கிகள் மூடப்படும்.

மார்ச் 19ஆம் தேதி உகாதி பண்டிகையினால் மும்பை, நாக்பூர், பெலாப்பூர், கர்நாடக மாநிலத்தின் பல நகரங்கள், சென்னை மற்றும் பனாஜி உள்ளிட்ட இடங்களில் வங்கிகள் இயங்காது.

அதேபோல், மார்ச் 20ஆம் தேதி ரம்ஜான் பண்டிகையினால் கொச்சி, திருவனந்தபுரம், ஜம்மு மற்றும் ஸ்ரீநகரில் வங்கிகள் மூடப்படும். மேலும், அந்தந்த மாநிலங்களில் உள்ள பிராந்திய பண்டிகைகளின் காரணமாகவும் சில நாட்களில் வங்கிகள் செயல்படாது.

மார்ச் 26ஆம் தேதி ராம நவமி முன்னிட்டு அகமதாபாத், சண்டிகர், டேராடூன், ஜெய்ப்பூர், கொல்கத்தா, லக்னோ மற்றும் ராஞ்சியில் வங்கிகள் மூடப்படும்.

சில நகரங்களில் மார்ச் 27ஆம் தேதியும் ராம நவமி தொடர்பான விடுமுறை தொடரலாம்.

மார்ச் 31ஆம் தேதி மகாவீர் ஜெயந்தி காரணமாக அகமதாபாத், பெலாப்பூர், பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், ஜெய்ப்பூர், கான்பூர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, நாக்பூர், புதுதில்லி, பாட்னா, ராய்ப்பூர், ராஞ்சி மற்றும் விஜயவாடா ஆகிய நகரங்களில் வங்கிகள் மூடப்படும்.

வங்கிகள் மூடப்பட்டிருந்தாலும், இணைய வழி வங்கி சேவை, கைபேசி வங்கி சேவை மற்றும் தானியங்கி பணவழங்கும் இயந்திர சேவைகள் வழக்கம்போல் செயல்படும்.

அவசர தேவைகளுக்கு இந்த வசதிகளை பயன்படுத்தலாம். விடுமுறை நாட்களால் காசோலைகள் பரிசீலனை செய்யப்படும் நேரம் தாமதமாகலாம். எனவே முக்கியமான பண பரிவர்த்தனைகளை முன்கூட்டியே முடித்துக்கொள்ளுவது நல்லது.

பண்டிகை காலங்களில் தானியங்கி பணவழங்கும் இயந்திரங்களில் பணத் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்பதால் தேவையான அளவு பணத்தை முன்பே எடுத்துவைத்திருப்பது சிறந்தது.

Related News

Latest News