பல மருத்துவ குணங்களையும் சிறப்பான சுவையையும் கொண்டுள்ள அத்திப்பழத்தை சாப்பிட முக்கியமான ஆறு காரணங்கள் உள்ளன.
அவை என்னவென்று இப்பதிவில் பார்ப்போம். நார்ச்சத்து நிறைந்துள்ள அத்திப்பழத்தை உண்பதால் குடல்களுக்கு ஊட்டம் கிடைப்பதோடு மலச்சிக்கல், அஜீரண கோளாறு போன்ற வயிற்று பிரச்சினைகள் சரியாகும்.
உலரவைக்கப்பட்ட அத்திப்பழத்தை பசி எடுக்கும் போது சாப்பிட்டால் நொறுக்குத்தீனிக்கு, ஆரோக்கியமான மாற்றாக இருப்பதோடு உடலுக்கு தேவையான சத்துக்களும் கிடைக்கும்.
பொட்டாசியம் சத்து குறைபாட்டால் இரத்த அழுத்த பிரச்சினைகள் ஏற்படுகின்றன. பொட்டாசியம் மிகுதியாக உள்ள அத்திப்பழம், இரத்த அழுத்தத்தை சீராக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
பெண்களுக்கு மாதவிடாய் கால சிக்கல்களை சமாளிக்கவும், கருவுறுதலுக்கும் இரும்புச்சத்து அவசியமாகிறது. அத்திப்பழத்தில் அதிகமாக இரும்புச்சத்து உள்ளதால், பெண்கள் சாப்பிட சிறந்த உணவாக அமைகிறது.
உடலில் உள்ள தேவை இல்லாத கொழுப்பை வெளியேற்றும் ஆற்றல் படைத்துள்ள அத்திப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இதய ஆரோக்கியம் மேம்படும் என கூறும் உணவியல் நிபுணர்கள், இவ்வளவு மருத்துவ பயன்கள் கொண்ட அத்திப்பழத்தை அவ்வபோது உணவில் சேர்த்து கொள்வதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும் என அறிவுறுத்துகின்றனர்.