ஓ.பி.எஸ். ஆதரவாளராக இருந்து வந்த மனோஜ் பாண்டியன் சமீப காலமாக கடும் அதிருப்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்று திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்திற்கு சென்ற மனோஜ் பாண்டியன், முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தார்.
இந்நிலையில் மனோஜ் பாண்டியன் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதிமுக சார்பில் ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்ததால் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
