Wednesday, January 14, 2026

மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் ராஜினாமா

மணிப்பூரில் வன்முறை நீடித்து வரும் நிலையில் அம்மாநில முதலமைச்சர் பதவியை பிரேன் சிங் ராஜினாமா செய்துள்ளார்.

மணிப்பூர் மாநிலத்தில் ஒன்றரை ஆண்டுகளாக வன்முறை நீடித்து வரும் சூழலில், பிரேன் சிங் ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்கட்சிகள் வலியுறுத்தி வந்தநிலையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மணிப்பூரில் மெய்தி மறும் குக்கி இன மக்கள் இடையே நடைபெறும் வன்முறையில் ஏராளமானோர் உயிரிழந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் தொடர் அழுத்தத்தால் பிரேன் சிங் நேற்று ராஜினாமா செய்தார்.

மணிப்பூர் ஆளுநர் அஜய் குமார் பல்லாவிடம் ராஜினாமா கடிதத்தை பிரேன் சிங் வழங்கினார். மணிப்பூர் மக்களுக்காக பல்வேறு வளர்ச்சி திட்டங்களை முன்னெடுத்த மத்திய அரசுக்கு நன்றி என பிரேன் சிங் தெரிவித்துள்ளார்.

Related News

Latest News