கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே நத்தமேடு செட்டிகுளம் கிராமத்தைச் சார்ந்த சந்திரா என்ற 60 வயது மூதாட்டி தனது ஓட்டு வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். மூதாட்டியின் வீட்டிற்கு பக்கத்து வீட்டில் வெல்டிங் வேலை செய்து வரும் பசுபதி என்ற இளைஞர் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 7ஆம் தேதி இரவு 11 மணி அளவில் மூதாட்டி வீட்டில் தனியாக இருந்த போது மூதாட்டியை தலையனையை வைத்து அழுத்தி கொன்றுவிட்டு கழுத்தில் இருந்த நகையை திருடி சென்றுள்ளார்.
திருடிய நகையை அடகு கடையில் வைத்து அந்த பணத்தில் நண்பர்களுடன் மது அருந்தியுள்ளார். மேலும் மூதாட்டியை கொன்று விட்டு ஒன்றும் தெரியாதது போல் ஊருக்குள் சுற்றி வந்துள்ளார் பசுபதி.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பசுபதியை கைது செய்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் மூதாட்டியை தலையனையை வைத்து அழுத்தி கொன்று விட்டு நகையை எடுத்துச் சென்று அடகு வைத்து குடித்ததாக ஒப்புக் கொண்டுள்ளார். இதையடுத்து பசுபதியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.