Tuesday, December 23, 2025

குச்சி ஐஸ்ஸில் பாம்பு இருந்ததால் அதிர்ச்சி அடைந்த நபர்

தாய்லாந்து நாட்டில் ஒருவர் தள்ளுவண்டி கடைக்காரரிடம் குச்சி ஐஸ் ஒன்றை வாங்கி, கவரை பிரித்துள்ளார். அதில் வித்தியாசமாக ஏதோ ஒட்டியிருப்பதைக் கவனித்து உற்றுப் பார்த்தவர் அதிர்ந்து போனார். ஒரு சிறிய பாம்பு ஐஸ் கட்டியில் உறைந்து போய் இருப்பது தெரியவந்தது.

இதைப் பார்த்து பதறிப் போன அவர், அதை புகைப்படமாக எடுத்து பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த பலரும் கருத்து பகுதியில் தங்கள் அதிர்ச்சியை வெளிப்படுத்தி, கலவையான கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

Related News

Latest News