விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் குடும்ப நல நீதிமன்றத்தில் செங்குளம் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் என்ற நபர் கடந்த 2025 ஆம் ஆண்டு மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில் பாலமுருகனு்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பாலமுருகன், நீதிபதி சுதாகர் மீது அரிவாளை வீசியுள்ளார். இதையடுத்து பாலமுருகனை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நீதிமன்றத்திற்குள் நீதிபதி மீதே அரிவாள் வீசிய சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
