Monday, August 18, 2025
HTML tutorial

மனைவி பிரிந்து சென்ற ஆத்திரத்தில் மூதாட்டிக்கு தீ வைத்த நபர் கைது

மயிலாடுதுறையில் மனைவி பிரிந்து சென்ற ஆத்திரத்தில் மூதாட்டி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காடு அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் காமராஜ். இவரது மனைவி புனிதா குடும்பதகராறு காரணமாக அவரை பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது. பலமுறை புனிதாவை வீட்டிற்கு அழைத்தும், அவர் திரும்ப வராததால், ஆத்திரமடைந்த காமராஜ், புனிதாவின் பாட்டி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். இதில் மூதாட்டியின் தலை மற்றும் உடலில் காயம் ஏற்பட்ட நிலையில், உறவினர்கள் அவரை காப்பாற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து காமராஜை போலீசார் கைது செய்தனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News