சென்னை அடுத்த குன்றத்தூர், நத்தம் முருகன் கோயில் அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக தாம்பரம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட போது குன்றத்தூர் நந்தம் அருகே கஞ்சா மூட்டைகளுடன் இருந்த நபரை சோதனை செய்ததில் அவரிடம் 25 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.
அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்ததில் அவர் சுசாந்த் மண்டல்(42), என்பதும் ஒடிசாவில் இருந்து கஞ்சா வாங்கி வந்து குன்றத்தூர், பல்லாவரம், குரோம்பேட்டை, பள்ளிகரணை, சோழிங்கநல்லூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் கூலி தொழிலாளியை குறிவைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.
அவர் மீது கஞ்சா வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.