Wednesday, April 2, 2025

போலீஸ் எனக்கூறி பணத்தை பறித்து சென்ற நபர் கைது

சென்னை: திருவான்மியூர், விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சாமுவேல்(18). மீன் கடையில் வேலை செய்துவரும் இவர் கடந்த 23ம் தேதி இரவு மெரினா கடற்கரையில் படுத்து தூங்கியுள்ளார். அப்போது அங்கு வந்த இளைஞர் ஒருவர் தன்னை போலீஸ் என கூறி அவரிடம் விசாரித்துள்ளார்.

திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி சாமுவேலிடமிருந்த பணத்தை பறித்து அங்கிருந்து தப்பியுள்ளார். இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் கடலூர் மாவட்டம், திட்டக்குடியைச் சேர்ந்த மகேந்திரன்(32) என்பவரை கைது செய்தனர்.

Latest news