நெல்லையில் கார் ஷோரூமுக்குள் அத்துமீறி நுழைந்து பொருட்களை சேதப்படுத்தி தகராறில் ஈடுபட்டவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
நெல்லை வண்ணார்பேட்டை தெற்கு புறவழிச்சாலையில் தனியார் கார் ஷோரூம் இயங்கி வருகிறது. இங்கு சுப்பிரமணியன் என்பவர் மேலாளராகப் பணிபுரிந்து வரும் நிலையில், கடந்த 18ம் தேதி ஷோரூமுக்குள் அத்துமீறி நுழைந்த 3 பேர், தகராறில் ஈடுபட்டு அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தினர்.
இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தகராறில் ஈடுபட்டவர்களில் ஒருவரான ராபின்சனை கைது செய்தனர்.மேலும், மற்ற இரண்டு பேரையும் தேடி வருகின்றனர்.
