மகாராஷ்ரா மாநிலம் புனே அருகே பாராமதி பகுதியில் இன்று காலை நடந்த விமான விபத்தில், அஜித் பவார் உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.
அஜித் பவாரின் மறைவுக்கு அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், அஜித் பவாரின் திடீர் மறைவால் அதிர்ச்சி அடைந்தேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
அவரது சித்தப்பாவான சரத் பவார் உட்பட அவரது குடும்பத்தினருக்கும், மறைந்த அஜித் பவாரின் நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் கூறியுள்ளார். அஜித் பவார் மரணம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பில் உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
