Monday, December 1, 2025

முன்னாள் கிரிக்கெட் வீரர் வீட்டின் அருகே ஆண் சடலம்!!

சென்னை கிழக்கு கடற்கரை சாலை, நீலாங்கரை காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட அக்கரை பகுதியில் உள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் வீடு அருகில் சுற்றுச்சுவர் ஒட்டிய புல் வளர்ந்து சற்று புதர் போன்று இருக்கும் இடத்தில் ஒருவர் முகத்தில் டேப் சுற்றிய நிலையில் உடல் அழுகிய நிலையில் இருந்ததை கண்டு பொதுமக்கள் நீலாங்கரை போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலின் பேரில் நீலாங்கரை போலீஸார் நிகழ்விடம் சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக இராயபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில் இறந்த நபர் வேலூர் மாவட்டம், காட்பாடியை சேர்ந்த கலையரசன்(33), என்பது மனைவியை பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் சென்னையில் கடந்த ஓர் ஆண்டாக வேலை தேடி வந்ததும் தெரியவந்தது.

கலையரசன் உயிரிழந்தது எப்படி தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாரேனும் கொலை செய்து விட்டனரா என சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் பிரேத பரிசோதனை அறிக்கையில் இறப்பிற்கான காரணம் தெரியவரும் என போலீஸார் தெரிவித்தனர்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News