சென்னை மேற்கு தாம்பரம் அடுத்த ரங்கநாதபுரம் பகுதியில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், புத்தாண்டு அன்று நள்ளிரவு அதே பகுதியை சேர்ந்த சிறார்கள் சிலர் கையில் பட்டாகத்தியுடன் ரீல்ஸ் செய்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த.அப்குதியை சேர்ந்தவர்கள் அச்சத்தில் வீட்டிலேயே முடங்கி இருந்துள்ளனர்.
ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பு, அதே பகுதிகளில் நண்பர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் இதே சிறார்கள், ஒருவரை சரமாரியாக வெட்டிய வழக்கில் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கபட்டனர்.
சிறையில் இருந்து வெளியே வந்த சிறார்கள், தங்களை பெரும் ரவுடியாக சித்தரிக்கும் வகையில் பட்டாகத்தியுடன் ரீல்ஸ் செய்து சமூக வளைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ காட்சிகளை கொண்டு 16 வயது சீறார்கள் இருவரை கைது செய்த தாம்பரம் போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.
