அதிமுக முன்னாள் எம்.பி. மைத்ரேயன் கடந்த ஆகஸ்ட் 13ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். பின்னர் மைத்ரேயனுக்கு திமுக உறுப்பினர் அட்டையை முதல்-அமைச்சர் வழங்கினார்.
இந்த நிலையில், அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த மைத்ரேயனுக்கு திமுக கல்வியாளர் அணி துணைத் தலைவராக கட்சிப்பதவி வழங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மைத்ரேயனுக்கு திமுக நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
