வடஅமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 7 ஆக பதிவு

வடஅமெரிக்காவில் உள்ள அலாஸ்கா மற்றும் கனடா பிராந்தியத்திற்கு நடுவே அமைந்துள்ள யுகோன் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 7 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கின. இதனால் மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட போதிலும், அங்கு எந்த சுனாமி எச்சரிக்கையையும் விடுக்கவில்லை. இதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

Related News

Latest News