Wednesday, August 20, 2025
HTML tutorial

வைரலாகும் மேஜிக் கார்பெட்

https://www.instagram.com/reel/CVuerowFWuL/?utm_source=ig_web_copy_link

தரைவிரிப்பு ஒன்றில் அமர்ந்து ஒருவர் பறப்பதுபோல வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேஜிக் நிபுணரான ரைஸோர்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை அண்மையில் பதிவிட்டுள்ளார். அதில், அவர் ஒரு கம்பளம் ஒன்றில் இளவரசர்போல் உடையணிந்து அமர்ந்திருக்க, அந்தக் கம்பளம் நான்கு சக்கர வாகனம்போல் விரைந்து செல்கிறது.

துபாய் சந்தைகளுக்கு நடுவிலும் முக்கியத் தெருக்களின் மத்தியிலும் மாயாஜாலக் கம்பளத்தில் பயணிக்கிறார். அதைக் காண்போரின் கண்கள் விரிய….. வியப்பில் ஆழ்கின்றனர்.

ரைஸோர்டி இந்த மேஜிக் கார்பெட்டில் அமர்ந்து தண்ணீரிலும் மிதந்துள்ளார்.

தனது மூளையில் தோன்றிய இந்த விந்தையான யோசனையை எப்படி செயல்படுத்துவது என்பதற்காக 8 மாதங்களாகத் திட்டமிட்டிருக்கிறார் ரைஸோர்டி. தற்போது அந்த யோசனையில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.

அதேசமயம், பார்வையாளர்களாலும் இப்படி மேஜிக் பயணம் மேற்கொள்ளமுடியும் என்று ஆச்சரிமூட்டுகிறார்.

தன்னுடைய மேஜிக் ரகசியத்தை விவரித்துள்ளார் ரைஸோர்டி.

ஒரு பிவிசி குழாயை சட்டம்போல் வடிவமைத்து, அதன்மீது கம்பளத்தை விரித்து மின்படலத்தைப் பொருத்தி உந்துவிசை மூலம் இயங்கக்கூடிய சர்ஃப் பலகையால் இப்படிப் பறப்பதுபோல மேஜிக் காட்டியுள்ளார் ரைஸோர்டி.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News