மதுரை பாராளுமன்ற தொகுதி எம்.பி. சு.வெங்கடேசனின் தந்தை இரா.சுப்புராம் (79) இன்று அதிகாலை காலமானார். சு.வெங்கடேசனின் தந்தை மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இறுதி மரியாதை சடங்குகள் இன்று மாலை ஹார்விபட்டியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய மார்க்சிஸ்ட் கட்சியில் பணியாற்றி வரும் சு.வெங்கடேசன் 2-வது முறையாக எம்.பி. பதவி வகித்து வருகிறார்.