சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாரின் உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்து, சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் போராட்டம் நடத்த நாம் தமிழர் கட்சி சார்பில் அனுமதி கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்தது.
தடையை மீறி போராட்டம் நடத்துவதாகக் கூறுவது அரசியல் கட்சிக்கு அழகல்ல என்றும், இது போன்ற பொறுப்பற்ற பேச்சுகளை நீதிமன்றம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது எனவும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கண்டனம் தெரிவித்தது. மேலும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாமல், அவர்கள் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்வது அரசியல் கட்சியின் கடமை என்றும் தெரிவித்தார்.