Wednesday, February 18, 2026

போடு வெடிய!! OTT-யில் வெளியாகும் ‘மதராஸி’- தேதி அறிவிப்பு

சிவகார்த்திகேயன் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான திரைப் திரைப்படம் ‘மதராஸி’.இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்

இந்த திரைப்படத்தில் ருக்மினி வசந்த், வித்யுத் ஜம்வால், விக்ராந்த், பிஜூ மேனன், சார்பட்டா பரம்பரை புகழ் சபீர் என பலர் நடித்து உள்ளனர்.இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், ‘மதராஸி’ திரைப்படம் வருகிற 1-ந்தேதி அமேசான் பிரைமில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக வருகிற 3-ந்தேதி ‘மதராஸி’ அமேசானில் வெளியாகும் என தகவல் வெளியான நிலையில், தற்போது 2 நாட்களுக்கு முன்னதாகவே வெளியாவது குறிப்பிடத்தக்கது.

Related News

Latest News