Monday, July 28, 2025

12 வருடங்கள் கழித்து வெளியாகும் விஷால் நடித்த திரைப்படம்

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள திரைப்படம் ‘மதகஜராஜா’. இப்படத்தில் ந்தானம், வரலட்சுமி, சதீஷ், நிதின் சத்யா, சோனுசூட், அஞ்சலி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார்.

கடந்த 2012-ம் ஆண்டு எடுக்கப்பட்ட இப்படம் அதே ஆண்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாவதில் பல சிக்கல்கள் இருந்தன. இந்நிலையில் 12 ஆண்டுகளுக்கு பிறகு ‘மதகஜராஜா’ திரைப்படம் வரும் ஜனவரி 12ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News